Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் தமிழகம் போர்களமாகும் – சீமான் எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (11:23 IST)
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை எழுந்துள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய வேதாந்தா நிறுவனம் அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்தது. இதற்கு தமிழக அரசு மறுத்த நிலையில் தமிழக அரசு ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியுமா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இது தொடர்பாக இன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பல கட்சிகளும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கு மட்டும் அனுமதிக்கலாம் என ஆதரவை தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “ஆக்ஸிஜன் பற்றாக்குறையை காரணம் காட்டி ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க முயல்கிறார்கள். கொரோனா பேரிடர் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும்; சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும்!” என்று அறிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments