Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பால் பாக்கெட் வாங்க போனா அடிக்கிறீங்களே! – சீமான் அறிக்கை!

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (12:15 IST)
போலீஸார் மக்களை தாக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அதை கண்டித்து சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக ஊரடங்கி பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மட்டும் வெளியே வரலாம் என முதல்வர் அறிவித்துள்ள நிலையில், மக்கள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் மக்களை அப்புறப்படுத்த போலீஸார் தடியடி நடத்துவது உள்ளிட்ட நூதன தண்டனைகளையும் வழங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் போலீஸார் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அரசு எங்கெங்கு கடைகள் உள்ளன என்பது குறித்த சரியான விவரங்களை தெரிவிக்காததால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க அலைமோதும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் போலீஸார் மக்களுக்கு அன்பாக எடுத்துக் கூறி அவர்களை வீடுகளில் இருக்க அறிவுறுத்தியுள்ள நிலையில், சில இடங்களில் போலீஸார் மக்களை அடித்து துன்புறுத்திய சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. அத்தியாவசிய பொருட்கள் சரியாக மக்களுக்கு கிடைக்க அரசு வகை செய்வதுடன், காவல்துறை மக்களிடம் மனிதாபிமானத்துடன் கூடிய கட்டுக்கோப்பை கடைப்பிடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

தவெக பொதுக்குழுவில் அறுசுவை உணவு.. 21 வகையான மெனு விவரங்கள்..!

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments