Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் செலவு ரூ.25 லட்சத்தை திருப்பிக் கொடுங்க -சீமான் விளாசல்

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2017 (18:00 IST)
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை காட்டி அங்கு நடைபெற இருந்த இடைத் தேர்தலை ரத்து செய்து விட்டது தேர்தல் ஆணையம். 


 

 
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சீமான் “பணப்பட்டுவாடா செய்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு தேர்தலை ரத்து செய்தால், நேர்மையாக தேர்தலை எதிர்கொண்ட நாங்கள் பாதிப்பு ஆளாகியிருக்கிறோம்.
 
நான் பிரச்சாரம் செய்யும் போது மக்களிடையே எங்கள் கட்சிக்கு நல்ல ஆதரவு இருந்தது. திமுக, அதிமுகவிற்கு அடுத்த மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சிதான் இருந்தது. அதனால்தான் பாஜக திட்டமிட்டு அங்கு தேர்தலை நிறுத்தி விட்டது. ஏனெனில், நான்காவது இடத்திற்கு செல்வதை பாஜக விரும்பவில்லை.
 
இந்த தேர்தலுக்காக எங்கள் கட்சியின் சார்பாக ரூ.25 லட்சம் செலவு செய்திருக்கிறோம். கடினமாக உழைத்திருக்கிறோம். யாருக்காக தேர்தலை ரத்து செய்தார்களோ, அவரகளிடமிருந்து எங்களுக்கு இழப்பீடு பெற்றுக் கொடுக்க வேண்டும். பணம் கொடுத்த வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். அவர்கள் ஆயுள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு பயம் வரும்” என கருத்து தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments