தமிழகத்தில் தனித்து போட்டியிட தயாரா? – பாஜகவுக்கு சீமான் சவால்!

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (14:59 IST)
தமிழ்நாட்டில் பாஜக பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாக அதன் மாநில தலைவர் அண்ணாமலை பேசி வரும் நிலையில் நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருக்கு சவால் விடுக்கும் தோனியில் பேசியுள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில் அதிமுக எதிர்கட்சியாக அங்கம் வகித்து வருகிறது. ஆனால் அரசின் கொள்கைகள், செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்தும், எதிர்த்தும் பாஜக தீவிரமாக ஸ்கோர் செய்து வருகிறது.

சமீபத்தில் பாஜக நடத்திய போராட்ட கூட்டங்களுக்கும் அதிக அளவில் மக்கள் வந்தது அதிமுகவினருக்கே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. பாஜகவின் செயல்பாடுகள் குறித்து அதிமுகவின் பொன்னையன் எச்சரித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பாஜக குறித்து கூறிய கருத்துகளை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் பெரிய கட்சி என அடிக்கடி கூறி வரும் பாஜக, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தவித கூட்டணியையும் அமைக்காமல் நாம் தமிழர் கட்சி போல தனித்து நின்று போட்டியிட தயாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments