Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமானை கைது செய்து சிறையில் அடைக்க பாஜக சதி செய்கிறதா?

சீமானை கைது செய்து சிறையில் அடைக்க பாஜக சதி செய்கிறதா?

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2017 (18:43 IST)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்முறைத் தூண்டியதாகக் கூறி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீமான் இது பாஜகவின் திட்டமிட்ட சதி என கூறியுள்ளார்.


 
 
கடந்த சில தினங்களுக்கு சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 
இந்நிலையில் இந்த வழக்குகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதையும் அவர்கள் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் பற்றி கடந்த 5 ஆண்டுகளாக நான் பேசி வருகிறேன்.
 
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் நெய்தல் படை அமைத்து மீனவர்களைப் பாதுகாப்போம் என்றும் கூறி வருகிறேன். மீனவர்கள் இந்த நெய்தல் படையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு துப்பாக்கியைக் கொடுப்போம் என்று பல கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன்.
 
ஆனால் அப்போதெல்லாம் என் மீது பாயாத வழக்கு இப்போது பாய்ந்துள்ளது. நான் மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருதால் பாஜக என்னைக் குறிவைத்து சதித் திட்டம் தீட்டி கைது செய்யது என்னை எப்படியாவது சிறையில் அடைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments