தென் மாவட்டத்தில் போட்டி.. கட்சியில் பிக்பாஸ் பிரபலங்கள்.. சீமானின் மெகா திட்டம்..!

Siva
வியாழன், 7 நவம்பர் 2024 (17:39 IST)
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட சீமான் முடிவு செய்திருப்பதாகவும், கட்சியை வளர்ப்பதற்காக பிக் பாஸ் பிரபலங்களை கட்சியில் இணைக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுவது நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பக்கம் விஜய் அரசியல் வருகை மற்றும் நாதக கட்சி நிர்வாகிகளின் விலகல் மைனஸ் ஆக இருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் கட்சியை வலிமையாக பிக் பாஸ் பிரபலங்களை சேர்க்க சீமான் முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் சென்றே ஆக வேண்டும் என்று சீமான் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக தென் மாவட்ட தொகுதி ஒன்றை தேர்வு செய்து அங்கு இப்போதே பணிகளை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் வரவு காரணமாக இளைஞர்களின் வாக்கு நாம் தமிழர் கட்சியில் இருந்து பிரிந்து விடுவதால், இந்த முறை அந்த கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவரும் நிலையில், சீமானின் இந்த மெகா திட்டம் எந்த அளவுக்கு அவரது கட்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகை கனகாவின் தந்தை இயக்குனர் தேவதாஸ் காலமானார்

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும்போது தொகுதி மக்களை கேட்டுத்தான் நீக்கினாரா? ஈபிஎஸ்க்கு டிடிவி கேள்வி

எடப்பாடி ஒரு பெரிய தலைவர் இல்லை.. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை: செங்கோட்டையன்

தொடர் கனமழை எதிரொலி.. மரம் விழுந்து பள்ளி சுவர் சேதம்.. OMR சாலையில் போக்குவரத்து நெரிசல்..

திமுக எங்களுக்கு எதிரி இல்லை!.. திடீர் டிவிஸ்ட் கொடுத்த ஆதவ் அர்ஜுனா!..

அடுத்த கட்டுரையில்
Show comments