Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எம்.ஜி.ஆரை முதல்வராக்கியது மக்களின் அறியாமை : சீமானின் சர்ச்சை பேச்சு

எம்.ஜி.ஆரை முதல்வராக்கியது மக்களின் அறியாமை : சீமானின் சர்ச்சை பேச்சு
, செவ்வாய், 20 அக்டோபர் 2015 (16:38 IST)
எம்.ஜி.ஆரை முதல்வராக்கியது மக்களின் அறியாமை!” என்று சீமான் கூறினார். இது பரவலாக கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.


 
 
நேற்று தந்தி டி.வி. விவாத நிகழ்ச்சியில் கந்துகொண்ட சீமான், “எம்.ஜி.ஆர். வென்றது கவர்ச்சியினால்தான். அவரை முதல்வராக்கியது மக்களின் அறியாமை” என்று கடுமையாக விமர்சித்தார்.
 
அ.தி.மு.க.வினரையும் எம்.ஜி.ஆர். ரசிகர்களையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது. அவர்கள், “இப்படி ஏதாவது உளறுவதுதான் சீமான் வழக்கமாக இருக்கிறது.  இதே சீமான் எம்.ஜி.ஆர்.  மட்டும் இன்னும் பத்து ஆண்டுகள் வாழ்ந்திருந்தால்  ஈழத் தமிழர்களுக்கு தனி நாடு கிடைத்திருக்கும்” என்று பல முறை பேசியிருக்கிறார்.
 
அது மட்டுமல்ல 2010 டிசம்பரில்  வேலூர் சிறையில் இருந்து விடுதலை ஆன சீமான் செய்த முதல் வேலை, அருகில் இருக்கும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலைபோட்டு வணங்கியதுதான்.
 
இப்போது திடீரென எம்.ஜி.ஆர். பற்றி அவதூறாக பேசுகிறார். இவரது வழக்கமே இதுதான். ஆரம்பத்தில் பெரியாரைப் புகழ்ந்து திராவிட இயக்கங்களின் மேடையில் ஏறி பெயர் வாங்கியவர், பிறகு பெரியாரையே தவறாக விமர்சிக்க ஆரம்பித்தார்” என்று கொதிப்புடன் கேட்கிறார்கள்  எம்.ஜி.ஆர். தொண்டர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil