வாடிக்கையாளரை பாதுகாக்க ஏடிஎம் மீது வேப்பிலை வைக்கும் காவலாளி!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (09:16 IST)
வாடிக்கையாளரை பாதுகாக்க ஏடிஎம் மீது வேப்பிலை வைக்கும் காவலாளி!
தான் பணிபுரியும் ஏடிஎம் மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க ஏடிஎம் காவலாளி ஏடிஎம் இயந்திரத்தின் மீது வேப்பிலையை வைத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
 
அந்த வகையில் பள்ளிபாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த ஏடிஎம் காவலாளி ஒருவர் தான் பணிபுரியும் ஏடிஎம் மையத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தின் மீது வேப்பிலையை வைத்துள்ளார். வாடிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் தினமும் ஏடிஎம் இயந்திரத்தின் மீது இந்த வேப்பிலையை வைத்து இருப்பதாகவும் வேப்பிலையின் மகிமை காரணமாக வாடிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று பரவாது என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments