சேலம் நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்!

Sinoj
புதன், 7 பிப்ரவரி 2024 (16:34 IST)
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சேலம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
 

தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளில்  ஒன்று  நாம் தமிழர் கட்சி. இக்கட்சியின் தலைமை ஒருகிணைப்பாளராக சீமான் உள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்காக இன்று அவர் சேலம்  நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அன்றைய கூட்டத்தில், நெய்தல் படை அமைத்து அதன் மூலம் 15000 பேருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி கொடுப்பேன் என பேசிய சீமான் மீது இந்திய இறையாண்மைக்கு எதிரான பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணைக்காக இன்று அவர் சேலம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அதேபோல் நாம் தமிழர் என்ற கட்சியின் நிர்வாகிகளின் வீட்டில் கடந்த 2 ஆம் தேதி என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று என்.ஐ.ஏ அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆஜாரானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனிச்சாமி எனக்கு தலைவர் இல்ல!.. பதில் சொல்ல அவசியம் இல்ல!.. செங்கோட்டையன் அதிரடி!...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கல்பாக்கம் அருகே கரை கடக்குமா? சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

இன்று தங்கம் விலை சரிந்தாலும் ரூ.96000க்கும் மேல் ஒரு சவரன்.. இன்னும் இறங்குமா?

நேற்று காலையில் உயர்ந்து பிற்பகலில் சரிந்த பங்குச்சந்தை.. இன்று காலையிலேயே சரிவு..!

சென்னையில் கன மழையை எதிர்த்து மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments