Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

18 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

18 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

18 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்
, திங்கள், 2 மே 2016 (08:36 IST)
பெண்ணின் வயிற்றில் 18 ஆண்டுகளாக இருந்த கத்திரிக்கோலை ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.


 

 
சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகரைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மனைவி பூ வியாபாரம் செய்துவரும் சரோஜா.
 
இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு அரசு மருத்துவமனையில் குடல்வால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
 
அப்போது அவரது வயிற்றில் தவறுதலாக மருத்துவர்கள் கத்திரிக்கோலை வைத்து தைத்துள்ளனர்.
 
இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கிய சரோஜாவிற்கு "ஸ்கேன்" செய்து பார்த்தபோது, அவரது வயிற்றில் ஒரு கத்திரிக்கோல் இருப்பது தெரியவந்தது.
 
ஏழ்மை நிலையில் இருந்த சரோஜாவால், மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் போனது. அத்துடன், இது குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
 
இந்நிலையில், சரோஜா, திடீரென வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதைத் தொடர்ந்து, உறவினர்கள் அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர்.
 
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றின் கத்திரிக்கோல் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
 
இதைத் தொடர்ந்து, சரோஜாவுக்கு அறுவை சிகிச்சை செய்து, கடந்த 18 ஆண்டுகளாக அவரது வயிற்றில் இருந்த கத்திரிக்கோலை வெற்றிகரமாக அற்றியுள்ளனர்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெற்ற தாயை கத்தியால் குத்தி, உயிருடன் எரித்துக் கொலை செய்த இளைஞர்