Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிக்ஜாம் புயல் எதிரொலி: பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

Webdunia
சனி, 2 டிசம்பர் 2023 (12:42 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்கனவே  புதுவையில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை என உயர் கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காரைக்கால் ஏனாம் ஆகிய பகுதிகளில்  டிசம்பர் 4 ஆம் தேதி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்திலும் டிசம்பர் 4 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்த நிலையில் டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடற்கரையில் அருகே புயல் நகர்ந்து வரும் என்றும் ஐந்தாம் தேதி அதிகாலையில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

Election Fever: மீண்டும் தமிழகம் வரும் மோடி! நடராஜர் கோயிலில் இருந்து மன் கீ பாத்!

அஜித்குமார் வீட்டிற்கு நேரில் சென்ற எடப்பாடி பழனிசாமி.. பெற்றோருக்கு ஆறுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments