Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழையால் விடுமுறை அறிவிப்பு எதிரொலி: அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு..!

Siva
வியாழன், 12 டிசம்பர் 2024 (09:28 IST)
கனமழை காரணமாக இன்று தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

இதையடுத்து, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவாரூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கரூர், திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி, திருவள்ளூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனமழையால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள 20 மாவட்டங்களில் இன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கனமழை காரணமாக வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழக பருவ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments