Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை நீடிப்பதால் மூன்று மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2015 (19:31 IST)
தமிழகத்தில் நாளையும் மழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் சில மாவட்டங்களில் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


 
 
ஏற்கனவே பெய்த, பெய்து கொண்டிருக்கும் மழையால் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. இந்நிலையில், சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன்,  இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் “மாலத்தீவு அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மறைந்து விட்டது.  ஆனால், இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. 
 
அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நிறைய இடங்களில் மழை பெய்யும்” என்று கூறினார்.
 
இதைத் தொடர்ந்து, நாளையும் சென்னை,திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments