Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் தலைமறைவு!

நெல்லையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் தலைமறைவு!

Webdunia
ஞாயிறு, 12 நவம்பர் 2017 (10:27 IST)
நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தும், ஆபாசமாக பேசியும் வந்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் மீது புகார் எழுந்ததும் அவர் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலஞ்சி அரசு உதவி பெறும் பள்ளியில் ராஜ் என்பவர் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்து மாணவிகளுக்கு டியூஷன் சொல்லிக்கொடுத்து வந்துள்ளார். இவர் அப்போது தன்னிடம் டியூஷன் படிக்க வந்த மாணவிகளிடம் தகாத  முறையில் பேசியும், பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளார்.
 
இதனையடுத்து தங்களிடம் தகாத முறையில் பேசியும், பாலியல் தொல்லை கொடுத்தும் வந்த ஆசிரியர் குறித்து தலைமை ஆசிரியர் ஆறுமுகத்திடம் மாணவிகள் அனைவரும் சேர்ந்து புகார் அளித்தனர். ஆனால் பள்ளி நிர்வாகம் இந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதனால் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவர தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் மீதும் காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பியோடிய தமிழ் ஆசிரியர் ராஜ் மற்றும் பள்ளி செயலர் சண்முக வேலாயுதம் ஆகியோரை போலிசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

குவைத் நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவம்..!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

அடுத்த கட்டுரையில்