மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி!

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (21:35 IST)
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மாணவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில்  தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.சில மாவட்டங்களில் வளிமண்டலக் காற்றழுத்தம் காரணமாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

இந்த  நிலையில், ராம நாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள  நயினார் கோவில் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த  11 ஆம் வகுப்பு மாணவன் கஜினி மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.

பலத்தை காயம் அடைந்த மாணவனை சக மாணவர்கள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments