பள்ளிகள் திறக்கும் தேதி மீண்டும் ஒத்திவைப்பு: புதிய தேதிகள் அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (11:51 IST)
கோடை வெயில் மே மாதம் முடிந்து ஜூன் மாதமும் கொளுத்திக் கொண்டிருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றுமுன் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் தமிழக முதல்வரிடம் ஆலோசனை செய்து பள்ளிகள் திறப்பதை ஒத்திவைப்பது குறித்து அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments