Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

Mahendran
சனி, 10 ஆகஸ்ட் 2024 (09:07 IST)
இன்று மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் 2024-25 கல்வி ஆண்டில் 220 நாட்கள் பள்ளி வேலை நாட்கள் ஆக அறிவிக்கப்பட்ட நிலையில் 19 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் பணி சுமையை குறைக்கும் வகையில் வேலை நாட்களை குறைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் பள்ளிகள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஜூலை மாதமும் இரண்டாவது, நான்காவது சனி விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இந்த மாதமும் இன்றும் வரும் 24ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல்கள் தனித்தனியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அறிக்கையாகவே வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments