Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

Siva
திங்கள், 1 ஜூலை 2024 (07:44 IST)
கன மழை காரணமாக சில பகுதிகளில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் தொடர்ந்து சுழற்சி காற்று வீசுவதன் காரணமாக சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக  நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அருணா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
 
ஆனால் அதே நேரத்தில் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்றும் மற்ற அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் என்றும் பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது,
 
இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, நீலகிரி, கோவை மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு..!

முன்னாள் அர்ஜெண்டினா அதிபர் அமெரிக்காவில் நுழைய தடை: அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments