Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுமன் வேடத்தில் சிறுவர்கள்! பிரதமர் மோடி ரோடு ஷோவில் தேர்தல் விதிமுறைகள் மீறல்? - கலெக்டர் விசாரணை!

Prasanth Karthick
செவ்வாய், 19 மார்ச் 2024 (10:54 IST)
நேற்று கோவையில் நடந்த பிரதமர் மோடி ரோடு ஷோவில் பள்ளி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் தேர்தல் பிரச்சார பணிகளில் பாஜக மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. முதல்கட்ட தேர்தல் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டை மையப்படுத்தி பிரதமர் மோடி அடிக்கடி பாஜக கூட்டங்களுக்கு வந்து செல்கிறார்.

இந்நிலையில் நேற்று கோவையில் பாஜக கூட்டத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி கோவை சாலையின் வழியாக காரின் மேல் தோன்றி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தப்படி சென்ற ‘ரோடு ஷோ’ நிகழ்வும் நடந்தது.

ALSO READ: 4 மாத பேரனுக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள பரிசு வழங்கிய இன்போசிஸ் நாராயணமூர்த்தி..!

இதில் பள்ளி மாணவ, மாணவியர் பலரும் பிரதமரை காண பள்ளி சீருடையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். மேலும் சில சிறுவர்கள் அனுமார் வேடத்தில், பாஜக துண்டுகளுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி தேர்தல் பிரச்சாரங்களில் சிறுவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று உள்ள நிலையில், ஒரு கட்சி சார்ந்த நிகழ்வுக்கு பள்ளி மாணவர்களை நிற்க வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறையிடம் விளக்க கேட்டுள்ள கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார், இதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக உறுதிக் கூறியுள்ளார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments