10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

Mahendran
சனி, 25 அக்டோபர் 2025 (12:14 IST)
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை நவம்பர் 4ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு இந்த தேர்வு அட்டவணை வெளியிடப்படவுள்ளது.
 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்  அன்பில் மகேஷ், நவம்பர் 4ஆம் தேதி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் தேர்வு அட்டவணை குறித்து விவாதிக்கப்பட்டு, அன்றைய தினமே இறுதி அட்டவணை வெளியாகும் என்று உறுதிப்படுத்தினார்.
 
மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதை எளிதாக்கும் வகையில் இந்த அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான (2025-2026) அட்டவணை தயாரிப்பு பணிகள் முடிவடைந்து அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டே தேர்வு தேதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுக்கு ஒன்னு சொல்றேன்!.. தவெகா போராட்டத்தில் போலீசை சீண்டிய புஸி ஆனந்த்!..

நாளை கன மழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... எச்சரிக்கை அறிவிப்பு

எஸ்ஐஆர் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.. அதிமுக அறிவிப்பு..!

சென்னையில் 96 என்ற புதிய அரசு பேருந்து.. தாம்பரம் முதல் அடையாறு வரை..!

சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. சுகாதாரத்துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments