கஞ்சா வழக்கு.. போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் இன்று ஆஜர்

Siva
புதன், 8 மே 2024 (07:22 IST)
சவுக்கு சங்கர் ஏற்கனவே பெண் காவல்துறை அதிகாரிகளை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர் மீது கஞ்சா வழக்கு போடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் கஞ்சா வழக்கில் இன்று அவர் மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே பெண் போலீஸ் அதிகாரிகளை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் காரில் கஞ்சா இருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கஞ்சா வழக்கும் அவர் மீது பாய்ந்து உள்ளது. அதுமட்டுமின்றி பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் சவுக்கு சங்கர் மீது அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி கொண்டே வருவதால் அவர் இப்போதைக்கு வெளியே வர முடியாது என்று தெரிகிறது.

 இந்த நிலையில் கஞ்சா வழக்கு என்பது மிகவும் சீரியசான வழக்கு என்பதால் இந்த வழக்கில் இருந்து அவர் தப்பிக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் இன்று ஆஜர் படுத்தப்படும் நிலையில் அந்த நீதிமன்றத்தின் நீதிபதி என்ன உத்தரவிடுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளையடிக்க முயற்சித்த பெண்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!.. பெங்களூர் பறக்கும் ரஜினிகாந்த்!...

பிறந்தநாளன்று தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்ட காவலர்!.. வேலூரில் சோகம்...

பிகார் பெண் எம்.பி. இரண்டு முறை வாக்களித்தாரா? இரு கைகளிலும் மை இருந்ததால் சர்ச்சை..!

8க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறியதால் 6 ஆடுகள் பலி.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments