சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த ஃபெலிக்ஸ் டெல்லியில் கைது..!

Mahendran
சனி, 11 மே 2024 (08:42 IST)
சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து ஃபெலிக்ஸ் டெல்லியில் ஃபெலிக்ஸ் கைது செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 2022ஆம் ஆண்டு கீதா என்ற பெண்ணிடம் பேட்டி எடுக்கும் போது அரசியலில் இருக்கும் பெண்கள்  குறித்து தவறாக பேசியதற்காக யூடியூபர் ஃபெலிக்ஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் ஜாமின் பெற்றார்.
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி டெல்லியில் ஃபெலிக்ஸ் கைது செய்யப்பட்டார்.
 
அவதூறான கருத்துக்களை தெரிவிக்க  தூண்டும் நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும் என்றும் யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான நேரம் இது என்றும் சவுக்கு சங்கர் வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை போது நீதிபதி கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சவுக்கு சங்கர் போல் இவர் மீதும் அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த வருஷமாவது தீபம் ஏத்துவோம்!... இயக்குனர் மோகன் ஜி ஃபீலிங்!...

அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம்: நாடாளுமன்றத்தில் தலைவர்கள் அஞ்சலி

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments