சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீதும் வழக்குப்பதிவு.. பரபரப்பு தகவல்..!

Mahendran
திங்கள், 6 மே 2024 (11:29 IST)
பெண் காவல்துறை அதிகாரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீண்டும் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
சவுக்கு சங்கர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை 17ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய பேட்டி தொடர்பான வீடியோவை வெளியிட்ட தனியார் யூடியூப் சேனல் மீதும் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 
இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக அந்த தனியார் சேனலை போலீசார் சேர்த்துள்ளதாகவும் இது குறித்து மேலும் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சவுக்கு சங்கரி பேட்டி எடுத்த நபர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments