சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி! – எத்தனை நாட்கள் அனுமதி?

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (12:07 IST)
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளித்து வனத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாதம்தோறும் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் இந்த மாதம் வைகாசி பௌர்ணமியை முன்னிட்டு ஜூன் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை 4 நாட்களுக்கு சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள் மலையேற்றத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்லக்கூடாது. காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் இரவில் மலையில் தங்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

அடுத்த கட்டுரையில்
Show comments