வர்தா புயலின் தற்போதைய செயற்கைகோள் புகைப்படம்!
வர்தா புயலின் தற்போதைய செயற்கைகோள் புகைப்படம்!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை மிரட்டி வரும் வர்தா புயல் காரணமாக வட மாவட்டங்கள் பலவற்றிலும் மழை பெய்து வருகிறது. இந்த வர்தா புயலின் தற்போதைய செயற்கைகோள் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னைக்கு மிக அருகில் சென்னையை நெருங்கிக் கொண்டிருக்கிறது வர்தா புயல். இந்த புயல் சென்னை பழவேற்காடு பகுதி அருகே அதிதீவிர புயலாக கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பழவேற்காட்டில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. எண்ணூரில் கடற்கரை ஓரத்தில் தடுப்புக்காக போடப்பட்டு இருந்த பாறாங்கற்கள் பலத்த காற்று காரணமாக சாலையில் தூக்கி வீசப்பட்டுள்ளது.
வர்தா புயல் சென்னைக்கு மிக அருகே 140 கி.மீட்டர் தூரத்தில் அதிதீவிரமான புயலாக மையம் கொண்டு இருக்கிறது. இது மணிக்கு 13 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது என கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் 20செ.மீ., மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.