Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிக்கலா உணவு சாப்பிட்டார்; நலமாக உள்ளார்! – மருத்துவமனை அறிவிப்பு

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (12:47 IST)
உடல்நல குறைவால் சசிக்கலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா சிறை தண்டனை முடிந்த நிலையில் வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ளார். அவரது விடுதலையை எதிர்நோக்கி பலர் காத்துள்ள நிலையில் அவருக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரை சந்திக்க அவரது சகோதரரும், அமமுக பொது செயலாளருமான டிடிவி தினகரன் பெங்களூர் சென்றுள்ளார். இந்நிலையில் சசிக்கலா உடல்நலம் குறித்து விளக்கமளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் “சசிக்கலா ஆபத்தான நிலையில் ஐசியூவில் இருப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை. அவருக்கு சிறிய அளவிலான உடல்நல கோளாறே ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் உணவு சாப்பிட்டார், எழுந்து நடந்தார், நலமாக உள்ளார். 3 நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments