Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா சென்னை வருவது எப்போது??

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (11:09 IST)
சசிகலா பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் விடுதலை இந்த மாதம் 27 ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 
 
அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கடுமையான நிமோனியா காய்ச்சல் இருப்பதாக சொல்லப்படுகிறது. விடுதலை ஆக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சசிகலாவின் உடல்நலக் குறைவு பலவிதமான சந்தேகங்களை எழிப்பியுள்ளது.
 
இந்நிலையில், சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்துள்ளது. ஆனால், சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதால் சசிகலாவுக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது என பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. 
 
மேலும், பெங்களூரு சிறையில் இருந்து நாளை மறுநாள் விடுதலையாகும் சசிகலா பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணா நினைவு நாளான 3 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சசிகலா சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்து, மியான்மரை அடுத்து இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து ஓடிய மக்கள்..!

நிதியமைச்சரை சந்தித்த செங்கோட்டையன்! ஒய் பிரிவு பாதுகாப்பா? - அதிமுகவில் மீண்டும் புகைச்சல்?

திமுக உண்மையிலேயே தமிழ் விரோத கட்சி: அமித்ஷாவின் ஆவேச பேட்டி..!

நேற்று 11 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. இன்றும் வெப்பம் அதிகம் இருக்கும் என தகவல்..!

மகிழ்ச்சி நிலைக்கட்டும்: தெலுங்கு, கன்னட சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்து சொன்ன விஜய்..

அடுத்த கட்டுரையில்
Show comments