Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலா தரப்பு வருவாய்க்கு மீறி 211 சதவீத சொத்து குவிப்பு ; தீர்ப்பின் முழு விபரம்

சசிகலா தரப்பு வருவாய்க்கு மீறி 211 சதவீத சொத்து குவிப்பு ; தீர்ப்பின் முழு விபரம்
, புதன், 15 பிப்ரவரி 2017 (11:22 IST)
சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தன்னுடைய வருவாய்க்கு மீறி 211 சதவீதம் சொத்து குவித்துள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேற்று தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.


 

 
எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. சசிகலா, தினகரன், இளவரசி ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், அவர்களுக்கு ரூ.10 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர். 
 
இந்நிலையில், நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில் கூறியதாவது: 
 
இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் ரூ.66 கோடிக்கு வருவாய்க்கு மேல் சொத்து சேர்த்ததக தனி நீதிமன்றம் கணக்கிட்டுள்ளது. இதனை, கர்நாடக நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் ரூ. 2 கோடியே 82 லட்சத்து 36 ஆயிரத்து 812 என கணக்கிட்டுள்ளது. 
 
இதன் அடிப்படையில் அளவுக்கு மீறிய சொத்து 8.12 சதவீதம் என வருகிறது. இதில்தான் தவறு ஏற்பட்டுள்ளது. இந்த தவறை சரி செய்தால், வருவாய்க்கு மீறிய சொத்து கணக்கு ரூ.16 கோடியே 32 லட்சத்து 36 ஆயிரத்து 812 என வருகிறது. இது 76.7 சதவீதமாகும்.

webdunia

 

 
உச்ச நீதிமன்றம் இதை ஆராய்ந்து பார்த்த போது, சசிகலா உள்ளிட்டோர் வருவாய்க்கு மீறி சேர்த்த சொத்து ரூ.35 கோடியே 73 லட்சத்து 4 ஆயிரத்து 6 ரூபாய் ஆகும். இது, 211.09 சதவீதமாகும். 
 
இதுவே, இவர்கள் குற்றவாளிகள் என தீர்மானிக்க போதுமானதாக இருக்கிறது. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தவறாக கணக்கிட்டுள்ளார். தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா இதை சரியாக கணித்துள்ளார். எனவே, அவரது தீர்ப்பை நாங்கள் உறுதி செய்கிறோம்” என நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கிய போது விவரித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போயஸ் கார்டனில் இருந்து சரணடைய பெங்களூரு புறப்படுகிறார் சசிகலா!