சசிகலா விடுதலை ஆகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு !!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (22:57 IST)
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் அக்ரஹார சிறையில் தண்டனை பெற்று வரும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வரும் 27 ஆம் தேதி காலை பத்து மணிக்கு விடுதலை செய்யப்படவுள்ளார் என கர்நாடக சிறைத்துறை அறிவித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்குத்தொடர்பாக சசிகலா அவரது உறவினராக இளவரசி, சுதாகரன் ஆகிய  மூவரும் வழக்கில் பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு அவர்களுக்கு 4 ஆண்டு காலத் தண்டனை விதிக்கப்பட்டது.

இவர்களுக்கான தண்டனை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாடம் 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்தாலும் அவரைப் பற்றிய பேச்சுகள் தமிழக அரசியல் களத்தில் உலா வந்துகொண்டிருந்தது. அவர் எப்போது விடுதலை ஆவார் என அமமுகவினர் எதிர்பார்த்து வந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் அக்ரஹார சிறையில் தண்டனை பெற்று வரும் ஜெயலலிதாவின் தோழியும் தினகரனின் உறவினருமான சசிகலா வரும் 27 ஆம் தேதி காலை பத்து மணிக்கு விடுதலை செய்யப்படவுள்ளார் என கர்நாடக சிறைத்துறை அறிவித்துள்ளது.

இதனால் சசிகலா ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments