Webdunia - Bharat's app for daily news and videos

Install App

IT-ஐ ஆஃப் செய்த சசிகலா: கோடிகளை காப்பாத்த முடியாது; லட்சங்களாவது எஞ்சுமா?

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (09:55 IST)
சிறையில் உள்ள சசிகலா, வருமான வரித்துறை தன் மீது போட்டுள்ள வழக்கை திருப்ப பெற வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 கோடி ரூபாய் அபராதம் ஆகிய தண்டனை பெற்ற சசிகலா, தற்போது பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்னும் அபராதத் தொகையான 10 கோடி ரூபாயை செலுத்தவில்லை என தெரிகிறது. 
 
இந்நிலையில், கடந்த 1994 - 1995 ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ரூ.48 லட்சம் ரூபாயை செலுத்த சசிகலாவுக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டது. இதனை வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது. 
இருப்பினும், வருமான வரித்துறை 2008 ஆம் ஆண்டு இதை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காக கொண்டு சென்றது. இந்த வழக்கு இன்னும் நடைபெற்று வரும் நிலையில் சசிகலா தரப்பில் வருமான வரித்துறை இந்த வழக்கை திரும்ப பெற வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளது. 
 
மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் பிறப்பித்த சுற்றறிக்கையில், ஒரு கோடி ரூபாய் அல்லது அதற்கு கீழ் உள்ள வருமான வரி தொடர்பான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என குறிப்பிட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
இதை கேட்ட வருமான வரித்துறை தரப்பு இந்த மனு தொடர்பாக வருமான வரித்துறையில் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக தெரிவித்துள்ளது. அப்படி இந்த வழக்கு திரும்ப பெறப்பட்டால் சசிகலா ரூ.48 லட்சத்தை செலுத்த வேண்டாம். 
 
ஆனால், தற்போது சிறை தண்டனை அனுபவித்து வரும் வழக்கில் 10 கோடி ரூபாய் அபராதத்தை நிச்சயம் செலுத்தியே தீர வேண்டும். அப்படி இல்லையென்றால்  மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அதிகரிக்கூடும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments