Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் கைதுக்கு சசிகலாவின் ரியாக்சன்!

தினகரன் கைதுக்கு சசிகலாவின் ரியாக்சன்!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2017 (10:48 IST)
அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரால் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட அவரது அக்கா மகன் டிடிவி தினகரனும் தற்போது இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
அதிமுக அம்மா அணியின் இரண்டு முதன்மை தலைவர்களும் நெருக்கடியில் இருப்பதால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். நேற்று முந்தினம் இரவு தினகரன் கைது செய்யப்பட்ட செய்தி பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு நேற்று காலை 11 மணி அளவில் தான் சொல்லப்பட்டிருக்கிறது.
 
சிறையில் உள்ள சசிகலாவை வழக்கமாக பார்க்க செல்லும் இளவரசியின் மகன் விவேக் தான் தினகரன் கைது செய்யப்பட்ட தகவலை சசிகலாவிடம் கூறியிருக்கிறார். நான் சொன்னதை அவன் கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. இப்போ அனுபவிக்கட்டும் என சசிகலா கூறியதாக அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
 
மேலும், ஜெயலலிதா இறந்த பின்னர் சசிகலா கட்சியை கட்டுக்கோப்பா நடத்தியதாகவும், தினகரன் எல்லாத்தையும் ஒன்னுமில்லாம பண்ணிட்டு இப்போ உள்ளே போயிட்டார். தினகரனால் தான் எல்லாம் என சசிகலா கூறியதாகவும் தகவல்கள் வருகின்றன.
 
ஆர்கே நகர் தேர்தல் நேரத்தின் போதே சசிகலா தினகரன் மீது கோபத்தில் இருப்பதாகவே கூறப்படுகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்த பின்னர் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை தினகரன் சந்திக்க சென்று, அவரை சந்திக்க முடியாமல் திரும்பி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments