Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் இருந்தபடியே ஷாப்பிங் சென்றதுதான் நன்னடத்தையா ? – சசிகலா விடுதலைக்கு என்ன அவசரம் !

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (10:45 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி கர்நாடகாவில் சிறையில் இருக்கும் சசிகலா நன்னடத்தை விதிகள் காரணமாக விடுதலை ஆக வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கிய ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேரும் குற்றவாளி எனத் தீர்ப்பாகி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்து கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதில் ஜெயலலிதா உயிர் இழந்து விட்டதால் மற்ற மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறைத்தண்டனையில் இரண்டரை ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் சிகலாவை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுப்பது குறித்து கர்நாடக சிறைத்துறை அம்மாநில அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு சிறையில் இருந்தபடியே மாற்று உடைகளில் சசிகலா ஷாப்பிங் சென்றதாக பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. மேலும்  சிறை விதிகள் மீறி சலுகைகள் பெற்றதாக சசிகலா மீது கர்நாடகா சிறைத்துறை முன்னாள் டிஜிபி ரூபா புகார் அளித்தார். அதற்கான ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்தார். ஆனால் ரூபா வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால் குற்றச்சாட்டுக் கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் உள்ளது.

இத்தனை மோசடி வேலைகளை செய்தவர் எப்படி நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட முடியும் என்ற கேள்வி எழுகிறது. ராஜீவ் கொலையில் சிக்கி 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்வதில் மெத்தனம் காட்டும் அரசு சசிகலா விடுதலைக்கு இப்போது இவ்வளவு அவசரப்படுவதேன் எனக் கேள்விகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments