Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா காரில் கொடி கட்டிக் கொண்டு வருவதை யாரும் தடுக்க முடியாது!

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (12:11 IST)
சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் சசிகலா காரில் அதிமுக கொடி இருந்ததை பற்றி கருத்து. 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27 ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் தற்போது அவர் பெங்களூரில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துக் கொண்டிருக்கிறார்.  சசிகலா வந்துக்கொண்டிருக்கும் காரில் அதிமுக கொடி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியதாவது, சசிகலா வரும் வழியில் இதுவரை போலீஸ் கெடுபிடிகள் இல்லை. கட்சி கொடி பிரச்சினை சட்ட விவகாரம். அதை காவல்துறையை வைத்து கையாள முடியாது. காவல்துறை கொடுக்கும் நோட்டீஸை சட்ட ரீதியாக எதிர்கொள்ளப் போகிறோம். 
 
அதிமுக கொடியை பயன்படுத்த விடாமல் தடுக்க காவல்துறையை பயன்படுத்துவது ஏன்? கொடியை அகற்ற வேண்டும் என்று சொல்வது தான் காவல்துறையின் பணியா? சசிகலா இன்னும் அதிமுக உறுப்பினராக தான் உள்ளார். ஆதலால் அவர் அதிமுக கொடியை பயன்படுத்த உரிமை உள்ளது. அவர் காரில் கொடி கட்டிக் கொண்டு வருவதை யாரும் தடுக்க முடியாது. சசிகலா தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள போது, கொடி கட்டக்கூடாது என்று சொல்ல முடியாது. இந்த பிரச்சினையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments