கணவனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பரோலில் வருகிறார் சசிகலா

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2018 (08:31 IST)
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சசிகலாவின் கணவர் நடராஜன் சற்றுமுன் காலமானதை அடுத்து, பெங்களூரு சிறையில் இருக்கும் அவரது மனைவி சசிகலா இறுதிச் சடங்கில் பங்கேற்க பரோலில் வருகிறார் .
உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ம.நடராஜன் சற்றுமுன் காலமானார். இன்று அதிகாலை 1.30 மணிக்கு சசிகலா கணவர் ம.நடராஜன்(74) உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில். நடராஜனின் உடல் எம்பாமிங் செய்வதற்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
 
நடராஜனின் உடல் சில மணிநேரம் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன்பின்னர் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும். இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு பரோல் கிடைத்துள்ளதால் நடராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அவர் சிறையிலிருந்து வெளியே வர இருக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments