Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் காலில் யாரும் விழ வேண்டாம் - அதிமுகவினருக்கு சசிகலா வேண்டுகோள்

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2016 (13:13 IST)
அதிமுக அமைச்சர்கள்,  நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் யாரும் தன்னுடைய காலில் விழ வேண்டாம் என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த வரை, தொண்டர்கள் முதல் முத்த அமைச்சர்கள் வரை அவரை சந்திக்கும் போது, சட்டென காலில் விழுவது வழக்கமான ஒன்றாகும்.  
 
இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவை அடுத்த அதிமுக தனது அடுத்த தலைமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஜெ.வின் தோழியான சசிகலா பொதுச்செயலாளர் பதவியை ஏற்று கட்சியை வழி நடத்திச் செல்ல வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் நேரிடையாகவே சென்று அவரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
 
அப்படி சசிகலாவை போயஸ் கார்டனில் சந்திக்கும் நிர்வாகிகள் அவரது காலில் விழுகின்றனர். ஆனால், யாரும் என் காலில் விழ வேண்டாம் என சசிகலா கண்டிப்பாக கூறிவிட்டாராம்.  இது அமைச்சர்களுக்கும் பொருந்தும் எனத் தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இனி வாய்ப்பே இல்லை: மூடப்பட்டது ஓய்வூதிய இயக்குநரகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments