Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் அணி கறார்: சசி குடும்பம் பிளீஸ் கோ அவுட்!

ஓபிஎஸ் அணி கறார்: சசி குடும்பம் பிளீஸ் கோ அவுட்!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (13:09 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் சசிகலா. அதன் பின்னர் முதல்வர் பதவியிலிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்து விட்டு அந்த பதவியை அடைய முயற்சி செய்தார் சசிகலா.


 
 
இதனையடுத்து ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுத்து அதிமுகவில் ஓபிஎஸ் அணியை உருவாக்கினார். பின்னர் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக தொண்டர்கள் ஆதரவு பெருகியது. ஆனால் பெரும்பான்மையானா எம்எல்ஏக்கள் ஆதரவு சசிகலா தரப்பிடம் இருந்ததால் சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனார்.
 
இருந்தாலும் சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக அறிவித்துவிட்டு சென்றார் சசிகலா. அதன் தினகரன் கட்டுப்பாட்டில் அதிமுக சிக்கித்தவித்தது. தொடர்ந்து சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் அதிமுகவில் அதிகமாகவே இருந்தது.
 
ஓபிஎஸ் அணியும் அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தினர் முற்றிலுமாக விலக வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கு நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என ஓபிஎஸ் கூறியதாக செய்திகள் வெளிவந்தது.
 
இதனை அதிமுகவின் சசிகலா அணியில் உள்ளவர்கள் வரவேற்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதற்காக பேச்சுவார்த்தை நடத்த 8 பேர் கொண்ட குழுவையும் அமைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை என ஓபிஎஸ் கூறியதால் சசிகலா குடும்பம் தொடர்ந்து அதிமுகவில் நீடிக்குமா என கேள்வி எழுந்தது.
 
இந்நிலையில் இது தொடர்பாக பேட்டியளித்த ஓபிஎஸ், சசிகலா குடும்பத்தினர் யாரும் அதிமுகவில் இருக்க கூடாது. முற்றிலுமாக அந்த குடும்பத்தின் பிடியில் இருந்து அதிமுக விடுபட வேண்டும் இது தான் எங்கள் முதல் கோரிக்கை. இதில் இருந்து எப்பொழுதும் பின்வாங்க மாட்டோம் என கறாராக கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என துடித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி: அமைச்சர் தங்கம் தென்னரசு

வீட்டுக்கு திருட்டு கரண்ட் எடுத்த சமாஜ்வாடி எம்.பி..! அபராதம் விதித்த மின்வாரியம்!

அம்பேத்கர் குறித்த அமித்ஷா உரையை நீக்க எக்ஸ் நிறுவனம் மறுப்பு.. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்..!

உக்ரைன் உடனான போரை நிறுத்திக் கொள்ள தயார்! சமரசத்துக்கு வரும் புதின்? ட்ரம்ப்தான் காரணமா?

நாளை முதல் சென்னையில் இருந்து பினாங்கு தீவுக்கு நேரடி விமானம்..நிறைவேறிய நீண்டநாள் கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments