Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜேம்ஸ் பாண்ட் சசிகலா; ஜெ. உயிருக்கு போராடும் போது ஆட்டம் போட்ட மன்னார்குடி குரூப்ஸ்: நேரில் பார்த்த சாட்சி!

ஜேம்ஸ் பாண்ட் சசிகலா; ஜெ. உயிருக்கு போராடும் போது ஆட்டம் போட்ட மன்னார்குடி குரூப்ஸ்: நேரில் பார்த்த சாட்சி!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (15:06 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் டிசம்பர் 5-ஆம் தேதி உயிருக்கு போராடும் போது சசிகலா தரப்பினர் கொஞ்சம் கூட முகத்தில் வருத்தம் இல்லாமல் மருத்துவமனையில் சசிகலா தலைமையில் அணிவகுப்பு நடத்தியதாக நேரில் பார்த்த அதிமுக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறியுள்ளார்.


 
 
தமிழக முதல்வராக சசிகலா அவசர அவசரமாக பதவியேற்க உள்ள நிலையில் இதனை எதிர்த்து அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது சசிகலா குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார் அவர்.
 
டிசம்பர் 5-ஆம் தேதி இரவு ஜெயலலிதா உயிருக்கு போராடியபோது சசிகலாவும் அவரது உறவினர்களும் துளிகூட கண்ணீர் விடவில்லை என அதனை தான் நேரில் பார்த்ததாக கூறினார் பி.எச்.பாண்டியன்.
 
மேலும் சசிகலா ஜேம்ஸ் பாண்ட் கோட் அணிந்து கொண்டு அவரை சுற்றி அவரது குடும்பத்தினர் வரிசையாக அணிவகுப்பு நடத்தினர். அவர்கள் அணிவகுப்பு நடத்திய விதம் இனி அதிமுகவும், ஆட்சியும் தங்களுக்கு தான் என்ற தோரணையில் இருந்தது என பி.எச்.பாண்டியன் கூறியுள்ளார். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மகரஜோதி தரிசனம்.. புக் செய்த பக்தர்களுக்கு மட்டும் அனுமதி! - சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள்!

புதுச்சேரியிலும் பரவியது எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று.. மருத்துவமனையில் சிறுமி அனுமதி..!

கடந்த வாரம் போலவே இந்த வாரமும் சரிந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ஒரே நாளில் 200 ரூபாய் அதிகம்..!

தென்மாவட்டம் செல்லும் மக்கள் கவனத்திற்கு: இன்றிரவு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments