Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடைச்சல் கொடுப்பாரா ஆளுநர்? : பீதியில் சசிகலா தரப்பு

குடைச்சல் கொடுப்பாரா ஆளுநர்? : பீதியில் சசிகலா தரப்பு

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2016 (11:55 IST)
தமிழக அரசின் நிர்வாகத்தில் தலையிட்டு, ஆளுநர் வித்யாசாகர் குடைச்சல் கொடுப்பாரோ என்று சசிகலா தரப்பு பீதியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
தமிழக முதல்வர் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வருவதால், அவரின் துறைகள், அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், இலாக இல்லாத முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
இந்நிலையில், தமிழகத்தின் முழு நேர ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.  தற்போது தமிழகத்தின் சில பகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். 
 
அப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், காவிரி பிரச்சனையை தீர்க்க உதவுவேன் என்றும், கங்கை கரையில் திருவள்ளுவர் சிலையை அமைக்க முயற்சிப்பேன் என்றும் பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு, சசிகலா தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.
 
ஏனெனில், தமிழகத்திற்கு நெருக்கமாக காட்டிக் கொள்ளும் அவர், அரசின் தலைமை வலுவாக இல்லாத சூழ்நிலையில், ஆளுநராக எல்லா முடிவுகளையும் எடுப்பார். இது தங்களுக்கு குடைச்சலை கொடுக்கும் என்றும் நினைக்கிறதாம் சசிகலா தரப்பு.
 
பாஜக நியமிக்கும் ஆளுநர் இப்படி செயல்படுவது புதிதல்ல. ஏற்கனவே டெல்லி, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஆளுநர்கள் தனித்து செயல்படுவது எல்லோருக்கும் தெரிந்த கதை. எனவே வித்யாசாகர் ராவும் அப்படியே செயல்படுவாரோ என்ற அச்சத்தில் சசிகலா தரப்பு இருப்பதாக செய்திகள் உலா வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

பொள்ளாச்சி வழக்கில் திமுக, அதிமுக உரிமை கோருவதில் நியாயம் இல்லை.. திருமாவளவன்

வேதியியல் தேர்வு.. ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் 100க்கு 100 மதிப்பெண்.. வினாத்தாள் லீக் ஆகியதா?

விஜய் - சீமான் கூட்டணியில் இணைகிறாரா ஓபிஎஸ்.. அழுத்தம் கொடுக்கும் நிர்வாகிகள்..!

கர்ப்பிணி பெண்ணின் கண்ணீருக்கு பலன்! BSF வீரரை திருப்பி அனுப்பியது பாகிஸ்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments