Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்கதான் வழி நடத்தனும் - சசிகலாவிற்கு கோரிக்கை வைத்த சரத்குமார்

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2016 (16:23 IST)
அதிமுக கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று சசிகலா வழிநடத்த வேண்டும் என நடிகரும் சமத்துவ கட்சி தலைவருமான சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
ஜெயலலிதா மரணம் அடைந்து சில நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், பொதுமக்கள், அதிமுக நிர்வாகிகள், மற்ற கட்சியினர் என பலரும் போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதா படத்திற்கு அஞ்சலியும், சசிகலாவிற்கு ஆறுதலும் கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் சமத்துவ கட்சித் தலைவர் சரத்குமார், தனது மனைவி ராதிகாவுடன் இன்று காலை போயஸ் கார்டன் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெ.வின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, சசிகலாவிற்கு ஆறுதல் கூறினார்.
 
அதன்பின்  அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் “அம்மாவின் வீட்டிற்கு இதுபோன்ற சூழ்நிலையில் வந்திருப்பது வருத்தமாக உள்ளது. அவர் மரணம் அடையவில்லை. தமிழக மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். 
 
அவர் விட்டுச் சென்ற பணியை அவருடன் 33 வருடங்கள் வாழ்ந்த சசிகலா தொடர வேண்டும். அவருக்கு அதிமுகவினர் ஒத்துழைப்பு கொடுத்து ஆதரவு அளிக்க வேண்டும்” என அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments