Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயமானது மக்கள் தேமுதிக: புதிய கட்சியை தொடங்கினார் சந்திரகுமார்

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2016 (14:11 IST)
தேமுதிகவில் இருந்து அதிருப்தி தெரிவித்து சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சந்திரகுமார் தலைமையில் புதிய கட்சியை தொடங்கினர். இந்த கட்சிக்கு மக்கள் தேமுதிக என பெயரிட்டுள்ளனர்.


 
 
திமுக உடன் தேமுதிக சேராமல் மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்ததற்கு சந்திரகுமார் தலைமையில் பல மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து, விஜயகாந்தையும், பிரேமலதாவையும் கடுமையாக விமர்சித்தனர்.
 
அதிருப்தி தெரிவித்த அனைவரையும் கட்சியில் இருந்து அதிரடியாக உடனே தூக்கினார் விஜயகாந்த். பின்னர் அதிருப்தியாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை விஜயகாந்த் மீதும் பிரேமலதா மீதும் வைத்தனர்.
 
இந்நிலையில் அதிருப்தியில் இருந்த பலரையும் ஒன்று திரட்டிய சந்திரகுமார் போட்டி பொதுக்குழுவை கூட்டி புதிய கட்சியை தொடங்கினார். சென்னை தி.நகரில் உள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் அதிருப்தியாளர்கள் மக்கள் தேமுதிக என புதிய கட்சிக்கு பெயரிட்டனர்.
 
இந்த கூட்டத்துக்கு சேலம், ஈரோடு, கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பல தேமுதிகவினர் வந்திருந்தனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

ஆபாசமாக கேள்வி கேட்டதால் இளம்பெண் தற்கொலை முயற்சி.. பெண் உள்பட யூடியூப் நிர்வாகிகள் கைது..!

மீண்டும் ரூ.54,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

கார்கில் போருக்கு நாங்கள்தான் காரணம் .. உண்மையை ஒப்புக்கொண்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்

ஒரு மணி நேரத்தில் 98.4 மி.மீ மழை.. கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழை..!