Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேசியகீதம் பாடிய போராட்டக்காரர்களை அடித்து இழுத்து சென்ற போலீஸ்காரர்கள்!

தேசியகீதம் பாடிய போராட்டக்காரர்களை அடித்து இழுத்து சென்ற போலீஸ்காரர்கள்!
, திங்கள், 23 ஜனவரி 2017 (12:34 IST)
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொடர் போராட்டத்தால் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வந்தனர்.

 
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மெரினா கடற்கரைக்குள் நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்த  போராட்டக்காரர்களிடம் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும்,  ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டமுன் வடிவை  அவர்களிடம் அளித்து சமாதானம் பேசினர். கிட்டதட்ட அரைமணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் முடிவில்,  போராட்டத்தை கைவிட தங்களுக்கு நான்கு மணிநேரம் அவகாசம் அளிக்கும் படி போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 
இதனால், மெரினாவில் பதற்றம் நிலவியது, தொடர்ந்து போராட்டக்காரர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  காவல்துறையினர் தொடர்ந்து போராட்டக்காரகளை வெளியேற்ற முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக, மெரினாவுக்கு  செல்லும் அனைத்து வழிகளுக்கும் அடைக்கப்பட்டன. அவ்வழியே செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று வழியில்  திருப்பிவிடப்பட்டன.
 
இதனை தொடர்ந்து காலஅவகாசம் தர மறுத்த போலீசார் கொஞ்சம் கொஞ்சமாக போராட்ட இளைஞர்களை குண்டுகட்டாக  வெளியேற்ற ஆரம்பித்தனர். பின்னர் தேசிய கீதத்தை பாட ஆரம்பித்தனர் அதனையும் பொருட்படுத்தாமல் போலீசார் அவர்களை  அகற்றினர். மேலும் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்தபடி அமர்ந்து வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று கூறிய் கொண்டிருந்தவர்களையும் இழுத்து சென்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவை போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஊடுருவலா?