Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தலைமைக் காவலரை டிராக்டர் ஏற்றி கொலை செய்த தேமுதிக கவுன்சிலரின் மகன் கைது

தலைமைக் காவலரை டிராக்டர் ஏற்றி கொலை செய்த தேமுதிக கவுன்சிலரின் மகன் கைது
, திங்கள், 21 ஜூலை 2014 (19:06 IST)
மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவலர் கனகராஜை, டிராக்டர் ஏற்றி கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த தேமுதிக கவுன்சிலரின் மகன் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

அரக்கோணம் அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய கும்பலைப் பிடிக்க முயன்றபோது தலைமைக் காவலர் கனகராஜ் டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக டிராக்டர் ஓட்டுநரான பேரூராட்சி தேமுதிக உறுப்பினரின் மகன் சுரேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவரது பெற்றோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவரது தாய் செண்பகவள்ளி தக்கோலம் பேரூராட்சியின் 6 ஆவது வார்டு தேமுதிக கவுன்சிலராக உள்ளார். தந்தை தேவராஜ் தக்கோலம் நகர தேமுதிக பொருளாளராக உள்ளார்.

தகவலறிந்த அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி அரசினர் மருத்துவமனைக்கு சென்று கனகராஜின் உடலை பார்வையிட்டு அவரது மனைவி முத்துகுமாரிக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் ஏடிஜிபி (சட்டம், ஒழுங்கு) டி.கே. ராஜேந்திரன், வடக்கு மண்டல ஐ.ஜி. மஞ்சுநாதா, வேலூர் சரக டிஐஜி தமிழ்ச்சந்திரன், மங்கலம் கிராமத்துக்குச் சென்று கனகராஜின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் உயிரிழந்த தலைமைக் காவலரின், அவரது சொந்த ஊரான மங்களத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

காவலர் கனகராஜின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil