சனாதன தர்மம் குறித்து சர்ச்சை பேச்சு.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Mahendran
செவ்வாய், 25 ஜூன் 2024 (11:44 IST)
சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்த நிலையில் அந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட போது சனாதனம் தர்மம் என்பது டெங்கு மாதிரி அதை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார்
 
அவரது பேச்சு சர்ச்சைக்குரிய வகையாக இருப்பதாக அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கில் உதயநிதி ஸ்டாலின் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இன்று இந்த வழக்கு விசாரணை நடந்த நிலையில் பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜரானார்.
 
இதனை அடுத்து அவரது ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.  மேலும்  உச்சநீதிமன்றத்தில் இதே வழக்கு நிலுவையில் இருப்பதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த வழக்கு ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார் 
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments