Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சலூன் கடைகள் திறந்திருந்தும் தொழிலாளர்கள் இல்லாததால் சிக்கல்!

Webdunia
ஞாயிறு, 9 மே 2021 (08:11 IST)
தமிழகத்தில் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சலூன் கடைகள் உள்பட அனைத்து கடைகளையும் மூட வேண்டும் என்றும் பொது போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் நேற்றும் இன்றும் ஊரடங்கிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து சலூன் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் திறக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து சலூன்களில் கூட்டம் குவிந்து வருகிறது 
 
ஆனால் நாளை முதல் ஊரடங்கு என்ற காரணத்தினால் சலூன் கடையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அனைவரும் விடுப்பு எடுத்து விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இதனால் போதிய தொழிலாளர்கள் இல்லாமலும் கடைகளை இயக்க முடியாத நிலை இருக்கிறது
 
இன்னும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு என்று கூறப்பட்டாலும் எத்தனை மாதங்களுக்கு நீடிக்கும் என்று தெரியாததால் இப்போதே முடி வெட்டிக்கொள்ள சலூன் கடைகளில் கூட்டம் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து சலூன் கடை உரிமையாளர் ஒருவர் கூறியபோது இரண்டு நாட்கள் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது ஓரளவு நிம்மதியாக இருந்தாலும் சலூன் கடைகளில் தொழிலாளர்கள் இல்லாததால் முடி வெட்ட வரும் வாடிக்கையாளர்களுக்கு முடி வெட்ட முடியாமல் தவித்து வருகிறோம்’ என்று கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க இருந்து வந்துச்சு.. நொடி பொழுதில் உக்ரைனை தாக்கிய ஏவுகணை! ரஷ்யாவின் ரகசிய ஆயுதம்..?

ஒரு கோடி உறுப்பினர்கள்.. இந்தியாவின் 5வது பெரிய கட்சியானது தவெக..!

6000-க்கும் அதிகமான நபர்களின் பங்கேற்புடன் நடைபெறவிருக்கும் சென்னை அரை மாரத்தான் 2024 நிகழ்வு!

திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில் விஜய் உறுதியாக இருப்பார். குஷ்பு நம்பிக்கை..!

ஜெகன்மோகன் ரெட்டிக்கு ரூ.1750 கோடி லஞ்சம் கொடுத்த அதானி! - அமெரிக்க குற்றப்பத்திரிக்கை தகவலால் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments