Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேலத்தில் பள்ளிக்கு சென்ற 10 ஆம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்!

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (13:13 IST)
சேலத்தில் பள்ளிக்கு சென்ற 10 ஆம் வகுப்பு மாணவனுக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாஸ்க் அணிய வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும், ஒவ்வொரு வகுப்பிலும் 25 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி உள்பட ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும் பள்ளிகளுக்கு நுழையும் முன் வரை மாணவர்கள் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் சேலம் மாவட்டம் தும்பல் ஊராட்சியில் பள்ளிக்குச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவனது வகுப்பு மாணவர்கள் அனைவரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த பள்ளியும் மூடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதிகள் துறவி போல் வாழ வேண்டும், சமூக ஊடகத்தில் கருத்து சொல்ல கூடாது: சுப்ரீம் கோர்ட்

ஒரே நாளில் 1200 புள்ளிகள் சரிந்து 843 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் ஆச்சரியம்..!

பிரியங்கா காந்தியின் முதல் பாராளுமன்ற உரை.. என்ன பேசினார்..!

சபரிமலையில் தொடர் கனமழை.. பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடையா?

அடுத்த கட்டுரையில்
Show comments