சேலம் மசாஜ் சென்டரில் பணியாற்றிய இளம்பெண் மர்ம மரணம்!

Webdunia
திங்கள், 23 செப்டம்பர் 2019 (22:53 IST)
சேலத்தில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் பணிபுரிந்து வந்த மிசோரம் மாநில இளம்பெண் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் அந்த பெண் அளவுக்கு அதிகமாக மதுகுடித்திருந்ததாக கூறப்படுகிறது. 
 
 
சேலம் அழகாபுரம் பகுதியில் வணிக வளாகத்தில் தனியாருக்கு சொந்தமான ஸ்பா என்ற மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது .இதில் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். பணி முடிந்தது அதே பகுதியில் அவர்கள் தங்க்யிருக்கும் வீட்டிற்க்கு சென்றுவிடுவார்கள்
 
 
இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று பணி முடிந்தவுடன் 5 பெண்களும் வீட்டிற்கு சென்றனர். அப்போது மிசோரமை சேர்ந்த 28 வயதான எஸ்தர் என்பவர் மட்டும் நூடுல்ஸ் வாங்கி வந்து அதனை ரம் குடித்து கொண்டே சாப்பிட்டதாக தெரிகிறது. அதன்பின் மறுநாள் காலையில் மற்ற நான்கு பெண்களும் எழுந்திருந்த நிலையில் எஸ்தர் மட்டும் எழுந்திருக்காமல் தூங்கி கொண்டிருந்தார். அவரை மற்ற பெண்கள் எழுப்ப முயன்றபோது அவரது உடல் சில்லென்று இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உடலை தொட்டு பார்த்தபோது பேச்சு மூச்சின்றி இருந்துள்ளார்.
 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்கள் மசாஜ் சென்டர் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் விரைந்து வந்து பார்த்தபோது எஸ்தர் இறந்து போயிருந்ததை உறுதி செய்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். காவல்துறை அதிகாரிகள் உடனடியாக எஸ்தரின்  சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எஸ்தர் இறந்தது குறித்து மிசோரம் மாநிலத்தில் உள்ள அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எஸ்தர் குடித்த ரம் பாட்டில் மற்றும் நூடுல்ஸ் டப்பாவை ஆகியவைதான் அவரது இறப்புக்கு காரணம் என்று கூறப்பட்டாலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்னரே எஸ்தரின் மரணத்திற்கான காரணம் தெரிய வரும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments