Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் ஆயிரக்கணக்கான ஹெல்மெட் விற்ற கடைக்காரர்: இதுதான் தந்திரம்

Webdunia
செவ்வாய், 17 டிசம்பர் 2019 (22:19 IST)
சேலம் பகுதியில் நேற்று முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து சேலத்தில் ஹெல்மெட் விற்கும் கடைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு கடைக்காரர் ஒரே ஒரு சலுகை அறிவிப்பு அறிவித்து ஒரே நாளில் ஆயிரக்கணக்கான ஹெல்மெட்டுக்களை விற்பனை செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அவர் அறிவித்தது என்னவென்றால் ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்பது தான். வெங்காயத்தின் விலை தங்கத்தின் விலையை போல் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டு வரும் நிலையில் எப்படியும் ஹெல்மெட் வாங்கி தான் தீர வேண்டும் அதை வெங்காயத்துடன் வாங்கிக் கொள்வோம் என்று பல வாடிக்கையாளர்கள் அவரது கடையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்
 
இது குறித்து அந்த கடைக்காரர் கூறிய போது ஹெல்மெட் என்பது உயிரை பாதுகாக்கும் கவசம் என்பதோடு அதை வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சி அடையும் வகையில் ஒரு கிலோ வெங்காயத்தை தான் வாங்கிக் கொடுப்பதாகும், இதற்காக அவர் ஒரு கிலோ ரூபாய் 130 க்கு தரமான வெங்காயத்தை வாங்கி வைத்திருப்பதாகவும், இதைப் பார்த்த மக்கள் ஹெல்மெட்டுகளை வெங்காயத்துடன் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்வதாகவும் கூறியுள்ளார். இவருடைய இந்த டெக்னிக்கை மற்ற கடைக்காரர்களும் விரைவில் கடைபிடிப்பார்கள் என தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments