Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்க சங்கிலியை கூழாங்கல்லாக மாற்றிய சாமியார்

Webdunia
புதன், 29 மார்ச் 2017 (18:17 IST)
சென்னையில் உடல் குறையை போக்குவதாக கூறிய 6 பவுன் சங்கிலியை கூழாங்கல்லாக மாற்றிய சாமியார் கைது செய்யப்பட்டார்.


 

 
சென்னை ஆவடியைச் சேர்ந்த நாகம்மாள்(55) கடந்த 7 மாதங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் அவரின் பூக்கடையை சரியாக நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார். தனது உடல்நிலை குறித்து நாகம்மாள் ராஜி என்பவரிடம் கூறியுள்ளார்.
 
அதற்கு ராஜி, துஷ்ட சக்திகள் உடம்பில் இருப்பதால், அதை நீக்க மாந்திரீகம் செய்ய சாமியாரை அணுகலாம் என கூறியுள்ளார். நாகம்மாள் அதற்கு ஒப்புக்கொண்டு மாந்திரீகம் செய்யும் சாமியார் வீட்டுக்குச் சென்றார். அங்கு சாமியார் நாகம்மாள் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகைகளை ஒரு பாத்திரத்தில் போட சென்னார். அதை வைத்து பூஜை நடத்தியதோடு, வீடு முழுக்க புகையை போட்டுள்ளார்.
 
அதோடு நாகம்மாளிடம் அரை மணி நேரம் கண்களை மூடி தியானம் செய்யும்படி கூறியுள்ளார். அதன்பின் உடல்நிலை சரியாகும் வரை அந்த பாத்திரத்தை திறந்து பார்க்காமல் பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
 
இதன்காரணமாக நாகம்மாள் உடல்நிலை சரியாகும் வரை அந்த பாத்திரை திறந்து பார்க்காமல் இருந்துள்ளார். 7 மாதத்திற்கு பிறகு உடல்நிலை சரியானவுடன் பாத்திரத்தை திறந்து பார்த்துள்ளார். அதில் தங்க நகைக்கு பதில் கூழாங்கல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நாகம்மாள் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் அந்த சாமியாரை கைது செய்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த முகமும்.. அந்த உதடும்.. யப்பா! பெண் ஊழியரை பப்ளிக்காக வர்ணித்த ட்ரம்ப்!

டிரம்ப் வரிவிதிப்பு மிரட்டலுக்கு பணியாத இந்தியா.. பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம்..!

தமிழகத்தில் குறையும் குழந்தை பிறப்பு! சீனாவை போல மாறி வரும் தமிழகம்?

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

முஸ்லீம் தலைமை ஆசிரியராக இருப்பதா? குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த 3 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments