Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதுரகிரி கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த சார்பு ஆய்வாளருக்கு மாரடைப்பு.. பரிதாபமாக உயிரிழப்பு..!

Mahendran
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (13:51 IST)
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த சார்பு ஆய்வாளருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றன என்பதும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வனத்துறை மற்றும் காவல்துறையினர் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு திருப்பூர் மாவட்ட சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் என்பவர் வருகை தந்திருந்தார். சாமி தரிசனம் செய்ய மலையேறி   கொண்டிருந்தபோது பசுகிடை என்ற பகுதிக்கு வந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த போதிலும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து பாலசுப்ரமணியம் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி இல்லை.. மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

பஸ் ஓட்டிக்கொண்டே ஐபிஎல் மேட்ச் பார்த்த டிரைவர்.. டிஸ்மிஸ் செய்த நிர்வாகம்..!

சவுக்கு சங்கர் வீட்டுக்குள் புகுந்த ரவுடி கும்பல்? உதவிக்கு வராத போலீஸ்? - அண்ணாமலை கண்டனம்!

தி.நகர், ஆர்.கே.நகர் மேம்பாலங்கள் திறப்பது எப்போது? சென்னை மாநகராட்சி தகவல்..!

பாக்கவே பயங்கரமா இருக்கே! கடற்கரையில் ஒதுங்கிய மர்ம உயிரினம்! - அதிர்ச்சியில் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments