Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ் வி சேகருக்கு நிபந்தனை முன் ஜாமீன்… நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (18:29 IST)
நடிகரும் பாஜக ஆதரவாளருமான எஸ் வி சேகர் தேசியக் கொடியை அவமதித்த வழக்கில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் தமிழக அரசு மீது பல்வேறு அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தலைவர்கள் சிலைக்கு காவி துண்டு அணிவித்தது போன்ற செயல்களில் முதல்வர் கண்டம் தெரிவித்திருந்தார். இந்த சம்பவங்களை குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எஸ்.வி.சேகர் தேசிய கொடி குறித்த தவறான தகவல்களை பேசியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

தேசிய கொடியில் உள்ள காவி நிறம் சுதந்திரத்திற்காக மக்கள் சிந்திய குருதியை நினைவுப்படுத்தும் பொருட்டு உள்ளதாக பாடங்களில் உள்ள நிலையில் அதை மதத்தோடு தொடர்புப்படுத்தி பேசியுள்ள எஸ்வி சேகர் ’தேசிய கொடியில் உள்ள காவி நிறத்தை நீக்கிவிட்டு முதல்வர் கொடி ஏற்றுவாரா என கேள்வி எழுப்பியதாகவும், இது உள்நோக்கத்துடன் மத துவேஷத்தை உண்டாக்கும் வகையில் தேசிய கொடியை பற்றிய தகவல்களை திரித்து கூறியுள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் தன்னை கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எஸ் வி சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். மேலும் அந்த மனுவில் தான் இனி எப்போதும் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசமாட்டேன் என்றும் முதல்வர் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் அந்த வழக்கு குறித்த விசாரணை இன்று மீண்டும் வந்தபோது நீதிபதிகள் எஸ் வி சேகரின் வருத்தத்தை உத்தரவாத மனுவாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையில் எஸ் வி சேகருக்கு நிபந்தனை ஜாமீனை நீதிமன்றம் வழங்கியுள்ளது. போலிசார் விசாரணைக்கு அழைக்கும்போது அவர் ஆஜராக வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments